சென்னையில் ஓடும் பேருந்தில் ரூ.5 லட்சம் அபேஸ்.. மர்ம நபர்களுக்கு போலீசார் வலை..! - Seithipunal
Seithipunal


சென்னையில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் இருந்து ரூபாய் 5 லட்சம் பணத்தை ஆட்டையபோட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையை அடுத்த மாம்பாக்கத்தை சேர்ந்தவர் வசந்தி(53). இவர், அவசர தேவைக்காக பணம் தேவைப்பட்டதால் வேளச்சேரி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று ரூபாய் 5 லட்சம் பணம் வாங்கியுள்ளார். இதையடுத்து வேளச்சேரி காந்திநகர் பேருந்து நிலையத்திலிருந்து மாநகர பேருந்தில் ஏறி சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து பேருந்து கூட்டமாக இருந்த நிலையில் விஜயநகர சந்திப்பில் இறங்கிய வசந்தி, தோள் பையை பார்த்தபோது ஜீப் திறந்திருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த வசந்தி, பையின் உள்ளே பார்த்தபோது, அதில் இருந்து ஐந்து லட்சம் பணம் திருடுபோனது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வசந்தி, வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஓடும் பேருந்தில் ரூபாய் ஐந்து லட்சத்தை திருடிய மர்ம நபர்கள் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 lakh money stolen from a woman in a running bus in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->