மீண்டும் ஒரு படுகொலை! திருச்சியில் பதற்றமான சூழல்! ஒருவர் பலி..5 பேருக்கு கத்தி குத்து! - Seithipunal
Seithipunal


திருச்சியில் இரு சமூகத்திடையே ஏற்பட்ட மோதலில் 5 பேருக்கு கத்திக்குத்து. ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி திருவானைக்காவல் அருகே திருவளர்ச்சோலை பகுதியைச் சேர்ந்தவர் நெப்போலியன். இவர் நேற்று மாலை நண்பர்கள் சிலருடன் அந்த பகுதி நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பல் அவர்களை சரமாரியாக கத்தியால் குத்தினர்.

இதில் ஒரே சமூகத்தை சேர்ந்த நெப்போலியன், கதிரவன், சங்கர்,குரு உள்ளிட்ட 5 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றொரு சமூகத்தை சேர்ந்த நாகேந்திரன் என்பவரும் படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடனடியாக அவர்கள் 6 பேரையும் சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நெப்போலியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மற்ற 5 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.

காதல் விவகாரத்தில் இந்த மோதல் சம்பவம் அரங்கேறியதாக தெரிய வந்துள்ளது. அந்தப் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 people stabbed in Trichy in clash between two communities


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->