தமிழகத்தில் சாலை விபத்து சாலை விபத்தில் 10,536 பேர் பலி: விபத்துகளைத் தடுக்க கடும் நடவடிக்கைகள்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை சாலை விபத்தில் 10,536 பேர் உயிரிழந்துள்ளனர். டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, விபத்துகளை குறைக்கும் நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் காரணமாக, கடந்த ஆண்டின் ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் ஜூலை மாதம் விபத்துகளின் எண்ணிக்கை 5 சதவீதம் குறைந்துள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை தமிழகம் முழுவதும் 10,066 விபத்துகள் நிகழ்ந்துள்ளன, அதில் 10,536 பேர் உயிரிழந்துள்ளனர். இதே சமயத்தில், 2023 ஆம் ஆண்டு, 10,589 விபத்துகளில் 11,106 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டில் 570 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

மேலும், வேகமாக வாகனத்தை ஓட்டி சென்றதாக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 97 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிய 2 லட்சத்து 31 ஆயிரத்து 624 பேர் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதாக 1 லட்சத்து 13 ஆயிரத்து 777 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில், இந்த ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தை மீறியதற்காக 76.15 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறிய 1 லட்சத்து 82 ஆயிரத்து 375 பேரின் டிரைவிங் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டு, இதுவரை 39 ஆயிரத்து 924 பேரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மோட்டார் வாகன விதிமீறல்கள் குறித்த இந்த தகவல்களால், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை அதிகரிக்க நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 Persendage less road accident fatalities in Tamil Nadu Strict measures to prevent accidents


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->