கள்ளக்குறிச்சியில் மீண்டும் கலவரம்.. 2 டிஎஸ்பிகள் தலைமையில் போலீஸ் குவிப்பு..!! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தை அடுத்த சங்கராபுரம் அருகே உள்ள மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மற்றும் சிவபுரம் கிராமத்தை சேர்ந்த செங்கோட்டையன் ஆகியோர் இடையே 3 மாதத்திற்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் சென்றபோது நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். இந்த விபத்தின் காரணமாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதை அடுத்து இரு தரப்பினருக்கும் இடையே உண்டான கைகலப்பு கலவரமாக மாறியதில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 

இந்த சம்பவம் தொடர்பாக சங்கராபுரம் போலீசார் நேற்று 5 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் இரண்டு கிராமங்களுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதால் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மேலும் மூக்கனூர் மற்றும் சிவபுரம் கிராமங்கள் இடையே கலவரம் ஏற்படாமல் இருக்க இரண்டு டிஎஸ்பிக்கள் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தால் சங்கராபுரம் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

50 Police presence due to riots in Kallakurichi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->