பேச்சிப்பாறை அணையில் மணிக்கு 500கனஅடி நீர் திறப்பு..திற்பரப்பு அருவியில் குளிக்க தடை!!
500 cubic feet per hour water release in Pachiparai dam
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த இரண்டு நாட்களாக கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வந்தது. இந்தநிலையில், நேற்று விடிய விடிய பெய்த கனமழையால் பேச்சிப்பாறை அணை முழு கொள்ளளவையும் எட்டி உள்ளது. இதனால் இன்று காலை 10 மணிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்க மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அவர் கூறியதாவது, உபரி நீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து கோதையாறு, தாமிரபரணி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல். உபரி நீர் திறப்பு காரணமாக குளிக்க தடை. உபரிநீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது
English Summary
500 cubic feet per hour water release in Pachiparai dam