நவீனமயமாகும் கோவை காவல் நிலையங்கள் - 51 கேமிராக்கள், 15 டேப்லெட்கள் வழங்கல்.! - Seithipunal
Seithipunal


நவீனமயமாகும் கோவை காவல் நிலையங்கள் - 51 கேமிராக்கள், 15 டேப்லெட்கள் வழங்கல்.!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் டேப்லெட்கள் மற்றும் உடலில் அணியும் நவீன கேமிராக்கள் வழங்கப்பட்டன.

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் படி, நேற்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டு, காவல்துறையினர் மேற்கொள்ளும் பணிகளைக் கண்காணிப்பதற்காக உடலில் அணியும் 51 கேமிராக்களை வழங்கினார். 

அதன் பின்னர் அவர் பேசியதாவது, "இந்த கேமராக்களை காவல்துறையினர் வாகனச்சோதனை, மனு விசாரணை, ரோந்து செல்லுதல் மற்றும் போக்குவரத்து சீர் செய்தல் போன்ற பல்வேறு வகையான பணிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

இது காவல்துறையினருக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்" என்று தெரிவித்தார். மேலும், அவர் கேமிராக்களின் செயல்பாடுகள் குறித்தும், அதனைப் பயன்படுத்தும் முறை குறித்தும் காவல் துறையினருக்கு விளக்கம் அளித்தார். 

அதேபோல், காவல் நிலையங்களுக்கு மூன்று டேப்லெட்டுகள் வீதம் முக்கிய காவல் நிலையங்களுக்கு 15 டேப்லெட்கள் வழங்கப்பட்டன. இதன் மூலம் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கமுடியும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

51 camera and 15 tab provide to covai police station


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->