ஆள் மாறாட்டம் செய்து 5.10 கோடி அபேஸ்.. கேரளாவை சேர்ந்த மோசடி கும்பல் கைது!
5.10 Crore Abbess impersonated Kerala gang arrested
நிறுவன உரிமையாளரை போல் வாட்ஸ்அப்பில் உரிமையாளரின் புகைப்படத்தை வைத்து ஆள் மாறாட்டம் செய்து நிறுவனத்தின் ஊழியரிடம் 5.10 கோடி ரூபாயை கொள்ளை அடித்த வழக்கில் கேரளா மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு நபர்களையும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய நபரை இணைய வழி போலீசார் கைது செய்தனர்.
கடந்த மாதம் 25ஆம் தேதி புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு நிறுவனத்தின் கணக்காளர் தன் உரிமையாளர் தான் பேசுகிறார் என்று நினைத்து ஐந்து தவணைகளாக 5 கோடியே 10 லட்ச ரூபாய் பணத்தை இணைய வழி மோசடிக்காரர்கள் சொன்ன வங்கி கணக்கு அனுப்பி வைத்து விட்டார் இது பற்றி உரிமையாளரிடம் தெரிவித்த போது தான் அது இணையவழி மோசடிக்காரர்கள் செய்த வேலை என்று தெரிய வரவே உடனடியாக இணைய வழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்கள் இது சம்பந்தமாக காவல்துறை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா உத்தரவின் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் காவல் ஆய்வாளர்கள் தியாகராஜன் மற்றும் கீர்த்தி தலைமையில் தனிப்படை போலீசார் கடந்த வாரம் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இரண்டு நபர்களை முவிக்குள் அலாம் முபி குல்அலாம் கைது செய்து சிறையில் அடைத்தனர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் 3 நபர்களை பிடிக்க ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வைத்து அஜித் என்ற நபரை கைது செய்ததில் மேற்படி நபர் தன்னுடைய செல்போனை உபயோகித்து தான் அந்த பணங்களை வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றியது தெரிய வந்தது.
அதனால் மேற்படி அஜித் என்பவர் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் தில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் மலப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த சில நபர்களுக்கு இந்த வழக்கில் தொடர்பு உள்ளது என்பதை கண்டுபிடித்து அங்கு சென்று முகமது ஷாபி அஜ்மல் என்ற இரண்டு நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர் மேற்படி நபர்கள் 30க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை துவக்கி மோசடி செய்த பணத்தை அந்த வங்கி கணக்கு மாற்றி எடுத்தது தெரிய வரவே மேற்படி இரண்டு நபர்களையும் கைது செய்து நேற்று மாலை தலைமை குற்றவியல் நீதிபதி முன்பு ஆயர்படுத்தி சிறையில் அடைத்தனர் மேலும் இந்த வழக்கில் கேரளா மேற்குவங்க மாநிலச் சேர்ந்த பல்வேறு நபர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வரவே அவர்களையும் கைது செய்ய காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன் அவர்களின் உத்தரவின் படி தனிப்படை அமைக்கப்பட்டு அவர்களை பிடிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன் பொதுமக்களுக்கு பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் போது, தங்களுடைய வங்கி கணக்கையோ ஆதார் அட்டையோ சிம்கார்டுகளையோ மற்றவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டாம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் மேற்படி சிம் கார்டு வங்கி கணக்குகளை இணையவழி மோசடிக்காரர்களுக்கு கொடுத்து பொதுமக்களின் பணத்தை திருட உதவியதால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள் ஐந்து சதவீத கமிஷனுக்கு ஆசைப்பட்டு இதுபோன்று இளைஞர்கள் இணைவழி மோசடிக்காரர்களுக்கு துணை போவதாக போலீசார் விசாரணை தெரிய வரவே பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு தெரிவித்துள்ளார்.
English Summary
5.10 Crore Abbess impersonated Kerala gang arrested