சென்னையில் 55 மின்சார ரெயில்கள் ரத்து - இதுதான் காரணமா? - Seithipunal
Seithipunal


தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இரவு நேர மின்சார ரெயில்கள் நேற்று வரை ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்று மற்றும் நாளை உள்ளிட்ட இரண்டு நாட்கள் மின்சார ரெயில் சேவைகள் காலை மற்றும் இரவு நேரங்களில் ரத்து செய்யப்படுகிறது. 

மொத்தம் 55 மின்சார ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. இதற்கு மாற்றாக ஏற்கனவே அறிவித்திருந்தது போலவே பகல் மற்றும் இரவு நேரங்களில் 20 நிமிட இடைவெளியில் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படும். 

இந்த சிறப்பு ரெயில், சென்னை கடற்கரையிலிருந்து பல்லாவரத்துக்கு இரவு 11.59 மணிக்கும், மறுமார்க்கமாக, பல்லாவரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 12 45 மணிக்கும் கடைசி சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்படவுள்ளது.

இதேபோன்று, கூடுவாஞ்சோியிலிருந்து செங்கல்பட்டுக்கு இரவு 11.55 மணிக்கும், செங்கல்பட்டிலிருந்து கூடுவாஞ்சோிக்கு இரவு 11 மணிக்கும் கடைசி சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்படவுள்ளது. மேலும், 29-ம் தேதி முதல் ஆகஸ்டு 2-ம் தேதி வரை பகல் நேர மின்சார ரெயில் சேவை வழக்கமான கால அட்டவணையின்படி இயக்கப்படும்.

ஆகஸ்டு 3-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை மின்சார ரெயில் சேவைகள் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏற்கனவே அறிவித்தது போலவே பகல் மற்றும் இரவு நேரங்களில் ரத்து செய்யப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

55 electric trains cancelled in chennai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->