குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் 5ஜி நெட்வொர்க் டவர்.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவில் பகுதியில் நகராட்சிக்கு உட்பட்ட 33 வது வார்டில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், தனிநபர் ஒருவருக்குச் சொந்தமான இடத்தில் செல்போன் டவர் அமைக்க குழி தோண்டப்பட்டு வந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.

மேலும் குடியிருப்பு பகுதிக்குள் 5ஜி நெட்வொர்க் டவர் அமைக்கப்படுவதால் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் குடியிருப்பு வாசிகள் பாதிக்கப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்படும் நிலை உருவாகும் என்று அச்சம் தெரிவிக்கின்றனர். 

இதுகுறித்து செல்போன் டவர் அமைக்காமல் இருப்பதற்கு அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும்      அப்பகுதிமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதன் பின்னர் குடியிருப்பு வாசிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் மீண்டும் செல்போன் டவர் அமைக்கும் பணியை துவங்கியுள்ளனர். 

இது குறித்து அதிகாரிகள் வந்தபோது அப்பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அப்போது, மாவட்ட நிர்வாகம் உடனடியாக செல்போன் டவர் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், குடியிருப்பு வாசிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5g network tower in viruthunagar


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->