ஓரினசேர்கைக்கு அழைத்து பணப்பறிப்பு - சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் ஓரின சேர்க்கைக்கு வாடிக்கையாளர்களை வரவழைத்து, ஒரு கும்பல் பணம் பறிப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் படி போலீஸார் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது புளியங்குடி பேருந்து நிலையத்தில் தகராறில் ஈடுபட்ட ஒரு கும்பல் போலீஸாரை கண்டவுடன் காரில் தப்பிச் சென்றது. இதைக் கவனித்த போலீசார், காரில் தப்பிச் சென்றவர்களை விரட்டி பிடித்து விசாரணை செய்தனர்.

அதில் அவர்கள், வாசுதேதல்லூர் பகுதியைச் சேர்ந்த செந்தமிழ், சதீஷ், சிவகிரி பகுதியைச் சேர்ந்த கவிக்குமார், கனகராஜ் உள்ளிட்ட நான்கு பேருடன் 17 வயது இளைஞர்கள் இரண்டு பேர் இருந்தது தெரிய வந்தது.

மேலும், இந்த கும்பல் சிவகிரி பகுதியில் டிண்டர் ஆப் என்னும் செல்போன் செயலி மூலம் ஒரு குரூப் உருவாக்கி, அதன் மூலம் ஓரினச்சேர்க்கையில் ஆர்வமுள்ளவர்களிடம் ஆசை வார்த்தை கூறி, வரவழைத்து பணப்பறிப்பில் ஈடுபடுவது தெரிய வந்தது.

இதையடுத்து, போலீசார் ஆறு பேரையும் கைது செய்து அவர்களிடம் மேலும் கிடுக்கு பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 peoples arrested for money fraud in tenkasi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->