சென்னை: ஓட்டை போட்டு 9 கிலோ தங்கம் ஆட்டை போட்டவர்களை பிடிக்க 6 தனி படை அமைப்பு..!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள பெரம்பூரில் ஸ்ரீதர் என்பவர் ஜெஎல் கோல்டு பேலஸ் எனும் நகைக்கடையை நடத்தி வருகிறார். அதன் நகைக்கடையின் மேல் தளத்தில் அவரது வீடு அமைந்துள்ளது. 

நேற்று இரவு சரியாக 9:30 மணி அளவில் தனது கடையை மூடி உள்ளார். இன்று காலை 9.30 மணி அளவில் கடையை திறக்க வந்த பொழுது கடையின் ஷட்டர் துளையிட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதைத் தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த பொழுது கிட்டத்தட்ட 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனை அடுத்து திருவிக நகர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

இந்த நிலையில் நகைக் கடையை சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் அன்பு ஆய்வு செய்து அதன் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது "நகை கடையில் ஷட்டர் உடைக்கப்பட்டு சுமார் 9 கிலோ தங்க நகைகள் திருடு போனதாக புகார் வந்தது.

அதன் அடிப்படையில் கொள்ளையர்களைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படையினர் சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் அனைத்து சாலைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதனால் கூடிய விரைவில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள்" என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 police teams formed in jewelery shop robbery in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->