சதுரங்க வேட்டை பாணியில் சென்னையில் 6 .5 லட்சம் புதையல் மோசடி! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் மாண்டியாவை சேர்ந்த ஒரு கும்பல் சென்னைக்குள்  ஊடுருவி தங்களிடம் புதையல் இருப்பதாகவும் அதில் தங்க நகைகள் இருப்பதாகவும் அப்பாவி மக்களை  ஏமாற்றி பணம் பரித்துள்ளனர் . கர்நாடக மாநிலம் மாண்டியா  மாவட்டத்தில் இருந்து 3௦-க்கும் மேற்பட்டவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் பகுதியில் தங்கி இருக்கிறார்கள்.

அவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்து அப்பகுதியில் விற்பனை செய்து வருகின்றனர். அந்த பகுதியிலேயே தனித்தனியாக வீடு எடுத்து வசித்து வருகின்றனர். இவர்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து சென்னைக்குள் ஊடுருவி அப்பாவி  பொதுமக்களிடம் புதையல் மோசடி செய்துள்ளனர். சென்னை தி. நகர் பகுதியில் ருக்மணி என்பவர் ஜெராக்ஸ் மற்றும்  செல்போன் உதிரி பாகங்களை கடை நடத்திவருகிறார்.

இந்தக் கடைக்கு வந்த ஊடுருவல்காரர்கள்,  தங்களிடம் பாரம்பரியமான புதையல் நகை இருப்பதாக . கூறி நகைகளை ருக்மணியிடம் கொடுத்துள்ளனர். அவர் அருகில் இருந்த நகைக்கடையில் பரிசோதித்த போது அவை உண்மையான தங்கம் என உறுதியானது எவ்வளவு விலை என்று கேட்டபோது 12 லட்சத்திற்கு இந்த தங்கம் விலை போகும் ஆனால் குடும்ப கஷ்டம் காரணமாக  6.5 லட்சம் மட்டும் கொடுத்தால் போதும் என்று கூறியுள்ளனர். அதற்கு ஒப்புக்கொண்டு தாம்பரம் பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் மாண்டியா கும்பல் ருக்மணியிடம் கொண்டுவந்த நகையை கொடுத்துவிட்டு  ஆறரை லட்ச ரூபாயை வாங்கிக் கொண்டு சென்றது.

பெற்றுக்கொண்ட நகையை மீண்டும் நகைக்கடையில் பரிசோதித்த போது அவை போலி நகை என்று தெரியவந்தது.  இதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அவர்கள்,  இது தொடர்பாக தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தாம்பரம் உதவி கமிஷனர் நெல்சன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையை  தொடங்கியது. சிசிடிவி மற்றும் செல்போன் தொடர்புகளை வைத்து அவர்கள் ஆத்தூர் பகுதியில்‌ இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அங்கு சென்று பார்த்த போது அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

அங்கிருந்த கீதா என்ற 40 வயது  பெண்ணை மட்டும் காவல்துறையினர் கைது செய்தனர்.  இதுபோன்று பல்வேறு குழுக்கள் குழுக்கள் சென்னையில் ஏமாற்று வழியில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது போன்ற வழக்குகளில் ஏமாற்றுபவர்கள் முதலில் நம்ப வைப்பதற்காக ஒரிஜினல் தங்க நகைகளை கொடுப்பார்கள்.   பணம் பெற்ற பின்னர் போலி  நகைக ளை  கொடுத்து ஏமாற்றி விடுவார்கள். தொடர்ந்து தப்பியோடிய  முப்பது பேரை  பிடிக்க காவல்துறையினர் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றாரனர்.  இந்த சம்பவம் சென்னை புறநகர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது ‌


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6.5 lakh treasure fraud in Chennai in the style of saduranga vettai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->