வீட்டில் அடைக்கலம் கொடுத்தால் வந்த வினை..6ம் வகுப்பு மாணவிக்கு நடந்த அவலம்..! - Seithipunal
Seithipunal


6ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை காவல்துறையினர் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு பெண் ஒருவர் தொடர்பு கொண்டார். அப்போது, 6-ம் வகுப்பு படிக்கும் 11-வயதான சிறுமியை வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து வருவதாகவும் அந்த சிறுமியின் தாயை மிரட்டிவருவதாகவும் அவர்களை மீட்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

குழந்தை நலத்துறை அதிகாரிகள் அந்த சிறுமியையும் அவரது தாயையும் மீட்டு விசாரணை மேற்கொண்டனர். கணவரை பிரிந்த நிலையில் தனது மகன் மற்றும் மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். செய்யதலி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டடு. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளகாதலாக மாறவே இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், செய்யதலியின் தம்பி ரியாஸ் என்பவர் அந்த வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  மேலும், வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார். தொடர்ந்து பல முறை வன்கொடுமை செய்துள்ளார்.

இதற்கிடையில் அந்த சிறுமி தனது தாயிடம்  இது குறித்து கூறியுள்ளார். இது குறித்து அந்த பெண் செய்யதலியிடம் முறையிட்டுள்ளார். ஆனால், தம்பிக்கு ஆதரவாக அவர்களை கொடுமை செய்துள்ளார். பாதுகாப்பாக்கிற்காக அங்கிருந்தவர்களே அத்துமீறியுள்ளனர்.

அவர்களின் வாக்குமூலத்தை அடுத்து அவர்கள் மீது வழக்குபதிவு செய்தனர். மருத்துவ கல்லூரி மத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மீது போக்சோ வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6th grade Student Sexually Abused


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->