#BREAKING : கடலூர் தடுப்பணையில் மூழ்கி 7 பேர் பலி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு.!
7 drowned in Cuddalore dam Chief Minister MK Stalin's relief announcement
கடலூர் கெடிலம் ஆற்றில் மூழ்கி பலியான 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ 5 லட்சம் நிதிஉதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த ஏ.குச்சிபாளையம் பகுதியை சேர்ந்த 4 சிறுமிகள் உட்பட 7 பேர் கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் குளிக்கச் சென்று, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
சிறுமிகள் உட்பட 7 பேரும் நீரில் மூழ்கிதாகவும், மயங்கிய நிலையில் அவர்களை மீட்ட ஊர் பொதுமக்கள் மருத்துமனையில் சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், தடுப்பணை அருகே குறைவாக தண்ணீர் இருக்கும் இடத்தில் சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென ஆழமான பகுதியில் சிறுமிகள் விழுந்து மூழ்கியதாக தெரியவந்துள்ளது.
ஒரே கிராமத்தை சேர்ந்த 4 சிறுமிகள் உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இந்த துயர சம்பவத்தை கேள்வியுற்று மிகவும் வேதனை அடைந்தேன் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.. மேலும் கடலூர் கெடிலம் ஆற்றில் மூழ்கி பலியான 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ 5 லட்சம் நிதிஉதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொது நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
English Summary
7 drowned in Cuddalore dam Chief Minister MK Stalin's relief announcement