ஐஏஎஸ் அதிகாரிகள் மீண்டும் பணியிட மாற்றம்!! யாருக்கு என்ன பதவி? முழு விவரம் இதோ!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் நிர்வாக காரணங்களுக்காக தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் நேற்று மீண்டும் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி,

1) வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக இருந்த அபூர்வா வேளாண் மற்றும் உழவர் நலத்துறை முதன்மைச் செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

2) உணவு மற்றும் கூட்டுறவுத் துறை செயலாளராக இருந்த ஜெகநாதன் வணிக வரித்துறை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

3) லஞ்ச ஒழிப்புத்துறை கமிஷ்னர் கோபால்ஜகூட்டுறவுத்துறை கூடுதல் தலைமை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

4) தமிழ்நாடு காதி கிராப்ட் நிர்வாக இயக்குனராக இருந்த ஷோபனா அச்சு மற்றும் எழுதுபொருள் துறை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

5) சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைமை செயல் அதிகாரியாக இருந்த கவிதா ராமு, தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண் இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

6) சிறப்பு திட்ட செயலாக்கத் துறை செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனா திட்ட வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

7) வேளாண் மற்றும் உழவர் நலத்துறை முதன்மை செயலாளராக இருந்த சமயமூர்த்தி வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதேபோன்று மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 IAS Officers transfer by TNgovtஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!! யாருக்கு என்ன பதவி? முழு விவரம் இதோ!!


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->