போலீசை கண்டு ஓட்டம்! சோதனையில் சிக்கிய 7½ கிலோ கஞ்சா! பெண் உட்பட 3 பேர் கைது! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு கடத்திவரப்பட்ட 7½ கிலோ கஞ்சா பறிமுதல். கடத்திவந்த பெண் உட்பட 3 பேரை காவல்துறை கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீசார் இரவில் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தபால் நிலையம் முன்பு தேனி சேர்ந்த முருகேஸ்வரி. கேரளா மேடம் அணைக்கட்டி பகுதியை சேர்ந்த அமீர், கோழி கோட்டை சேர்ந்த முகமது சபீர் பாஷா ஆகிய மூன்று பேரும் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் திருப்பூர் தபால் நிலையம் அருகே நின்று கொண்டுள்ளனர்.

சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் அருகில் சென்றபோது, போலீசை கண்டு பயந்து ஒருவர் தப்பி ஓடியுள்ளார். அவரை காவல்துறையினர் மடக்கி பிடித்து 3 பேரிடமும் விசாரணை நடத்தினர்.

அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது பையில் இருந்த 7 கிலோ 600 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து 3 பேரையும்  காவல்துறை கைது செய்தனர்.

திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து முருகேஸ்வரி, அமீர், முகமது சபீர் பாஷா ஆகிய மூன்று பேரையும் கைது செய்ததுடன் அவர்கள் வைத்திருந்த 7 கிலோ 600 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 kg ganja seized in Tirupur


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->