அக்காவுடன் விளையாடி கொண்டிருந்த போது சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்.. சோகத்தில் குடும்பத்தினர்.! - Seithipunal
Seithipunal


விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது கடப்பாக்கல் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரங்கநாதபுரத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி இளவரசி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டார். 

இந்த தம்பதியினருக்கு சுபத்ரா(வயது 9) என்ற மகளும், சுசிவின்ராஜ்(வயது 7), சுபிராஜ்(வயது 3) என்ற மகன்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் சுபத்ரா தனது தம்பிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த கடப்பாக்கல் சுசிவின் ராஜ் மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். 

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 year's old boy death in play in house


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->