''இந்து மதத்தை வெறுப்பவர்கள், அடிமை மனநிலை கொண்டவர்கள்;'' பிரதமர் மோடி..! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட உள்ள புற்றுநோய் மருத்துவ ஆராய்சி மற்றும் அறிவியல் மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசியதாவது;-

"நாட்டில் இன்று சில தலைவர்கள் மதத்தை கேலி செய்வதையும், மக்களை பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதையும் நாம் பார்த்து வருகிறோம். இவர்களைப் போன்ற நபர்களுக்கு சில வெளிநாட்டு சக்திகளும் ஆதரவளிக்கின்றன'' என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன். ''இந்து மதத்தை வெறுப்பவர்கள் அனைத்து காலகட்டங்களிலும் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். அடிமை மனநிலை கொண்டவர்கள் நமது மதம், கலாசாரம், நம்பிக்கை, பண்பாடு மற்றும் பண்டிகைகளை விமர்சிக்கின்றனர்'' என தெரிவித்துள்ளார்.

மேலும், ''இயற்கையாகவே முற்போக்கு தன்மையை உடைய நமது மதம் மற்றும் கலாசாரத்தை அவர்கள் விமர்சனம் செய்கின்றனர். நமது சமூகத்தை பிரித்து, ஒற்றுமையை உடைக்க வேண்டும் என்பதே அவர்களின் திட்டம்." அந்த விழாவில் நரேந்திர மோடி அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Those who hate Hinduism have a slave mentality Prime Minister Modi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->