#கோயம்புத்தூர் || வாட்டர் ஹூட்டரை தொட்ட சிறுவன், மின்சாரம் தாக்கி பரிதாப பலி..! - Seithipunal
Seithipunal


எலக்டிரிக் வாட்டர் ஹீட்டரில் இருந்து மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம், பிச்சனூர் பகுதியை சேர்ந்தவர் ராமன். இவருக்கு திருமணமாகி 7  வயது மகன் உள்ளார்.ராமன் சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டதால் கிருத்திகா தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். சம்பவதன்று வழக்கம் போல குளிப்பதற்காக பாட்டி ராமாத்தாள் மினி எலக்ரிக் வாட்டர் ஹீட்டர் மூலம் தண்ணீர் சூடு பண்ணியுள்ளார்.  அப்போது குழந்தை கிருத்திக் அதன் அருகே அமர்ந்திருந்துள்ளார்.

இதனிடையே வெளியே சென்ற ராமாத்தாள் உள்ளே வந்து பார்த்த போது சிறுவன் மின்சாரம் தாக்கி மயங்கிய நிலையில் கிடந்துள்ளான். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பாட்டி உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை இன்றி பரிதாபமாக பலியானர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 Years old Child Death


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->