75வது சுதந்திர தின விழா.. 75 பைசாவுக்கு பிரியாணி.. எங்கு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


75 பைசாவுக்கு பிரியாணி தரப்படும் என்ற அறிவிப்பால் தஞ்சையில் உள்ள பிரபல பிரியாணி கடையில் மக்கள் கூட்டம் அலை மோதியதால் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து தஞ்சை ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சிறப்பு சலுகையாக இன்று பிரியாணி வாங்க வரும் முதல் 75 நபர்களுக்கு 75 பைசாவுக்கு பிரியாணி வழங்கப்படும் என்ற சலுகை அறிவிக்கப்பட்டு இருந்தது

இந்த சலுகை அறிவிப்பால் பிரியாணி பிரியர்கள் இந்த கடையை நோக்கி படையெடுத்தனர். காலை முதலே இன்று அந்த ஓட்டலின் முன் நீண்ட வரிசையில் பொது மக்கள் காத்திருந்தனர்

இந்த நிலையில் பொதுமக்கள் 75 பைசாக்களை சேகரித்துக் கொண்டு நீண்ட வரிசையில் நின்ற நிலையில் முதல் 75 நபர்களுக்கு 75 பைசா மட்டும் வாங்கி பிரியாணிகளை அந்த ஓட்டல் நிர்வாகம் வழங்கியது. அதனை பிரியாணி பிரியர்கள் பார்சலாக வாங்கி மகிழ்ச்சியுடன் சென்றனர். இதனால் மக்கள் கூட்டம் அலை மோதியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

75th independence day special 75 Paisa biriyani in Thanjavur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->