அமெரிக்காவின் ஆதிக்கத்திலிருந்து விடுப்படுவோம்; ஐரோப்பிய நாடுகளுக்கு ஜேர்மனியின் புதிய தலைவர் மெர்ஸ் அழைப்பு..!
German new chancellor Merz calls on European countries to break free from American dominance
ஜேர்மனியின் அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் புதிய கன்சர்வேட்டிவ் கட்சியின் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் அதிபராக வெற்றிப் பெற்றார். இதன் பிறகு அவர் மொத்த ஐரோப்பிய நாடுகளுக்கும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதிலும், ஃப்ரெட்ரிக் மெர்ஸ் அமெரிக்கா தொடர்பில் பதிவு செய்துள்ள கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது.
ஐரோப்பிய கண்டத்தின் எதிர்காலத்திற்கு நேரெதிரான நிலைப்பாடு கொண்ட நாடாக அமெரிக்கா மாறிவருகிறது. ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவிடம் இருந்து விலகி தனித்துச் செயல்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன், ஞாயிற்றுக்கிழமை தேர்தலில் அமெரிக்க அதிகாரிகளின் தலையீட்டையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், டொனால்டு ட்ரம்ப் நிர்வாகமும், உலகின் பெரும் கொடீஸ்வரருமான எலோன் மஸ்க் ஆகியோர் தீவிர வலதுசாரிகளான AfD கட்சிக்கு ஆதரவளித்தனர். ஆனாலும், கன்சர்வேட்டிவ் கட்சிகளான CDU/CSU வென்றுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் அவர் மேலும் கூறுகையில், ''ஐரோப்பாவை வலுப்படுத்தினால் மட்டுமே, அமெரிக்காவின் ஆதிக்கத்தில் இருந்து வெளியேற முடியும். அமெரிக்காவிடம் இருந்து நாம் படிப்படியாக உண்மையான சுதந்திரத்தை அடைவதற்கு, கூடிய விரைவில் ஐரோப்பாவை வலுப்படுத்துவதே தமது முழு முன்னுரிமையாக இருக்கும்'' என்று ஃப்ரெட்ரிக் மெர்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆனால், கன்சர்வேட்டிவ் கட்சியின் வெற்றியை ஜனாதிபதி ட்ரம்ப் வரவேற்றுள்ளதுடன், இது ஜேர்மனியின் சிறந்த நாட்களில் ஒன்று எனவும் குறிப்பிட்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
German new chancellor Merz calls on European countries to break free from American dominance