கன்னியாகுமரி : ஊராட்சிமன்றத் துணைத் தலைவருக்கு 76 மாதம் சிறை - நடந்தது என்ன?
76 month jail penalty to deputy chairman in kanniyakumari
கன்னியாகுமரி : ஊராட்சிமன்றத் துணைத் தலைவருக்கு 76 மாதம் சிறை - நடந்தது என்ன?
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாலப்பள்ளம் குடியிருப்புவிளை பகுதியைச் சேர்ந்தவர் விஜி மோகன். ரீத்தாபுரம் ஊராட்சியில் துணைத் தலைவராக உள்ள இவர் கடந்த 2011-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ஜான்சன் என்பவரின் மகளைக் கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஜான்சன் காவல்நிலையத்தில் ஜான்சன் புகார் கொடுத்து இருந்தார். இந்தப் பிகார் விஜி மோகனின் உறவினர் அருளப்பன் என்பவரின் தூண்டுதலின் பேரில் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அருளப்பனுக்கும், விஜி மோகனுக்கும் இடையே முன்விரோதம் இருந்துவந்தது.
இந்த நிலையில், அருளப்பனை விஜிமோகன் தாக்கி கொலைமிரட்டல் விடுத்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போதே அருளப்பனை மீண்டும் விஜிமோகன் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதுதொடர்பான இரண்டு வழக்குகளும் இரணியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த நிலையில், இந்த வழக்குக்கான தீர்ப்பு நேற்று மாலை அளிக்கபட்டது. அதில், “இரு வழக்குகளிலும் மொத்தமாக 76 மாதச் சிறைதண்டனையும், 21 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
76 month jail penalty to deputy chairman in kanniyakumari