பக்ரீத் பண்டிகை: தமிழகத்தில் 800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..! - Seithipunal
Seithipunal


பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்வோருக்கு வசதியாக ஏற்கெனவே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 800 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விரைவு போக்குவரத்துக் கழக இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "பக்ரீத் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று சென்னையிலிருந்தும், பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு, கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு இன்று இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 400 சிறப்புப் பேருந்துகளும், கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து பெங்களூரு உள்ளிட்ட பிற முக்கிய இடங்களுக்கு 400 சிறப்புப் பேருந்துகளும் என மொத்தம் 800 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆகவே, தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை கண்காணித்திட அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். 

எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்திக் கொண்டு தங்களது பயணத்தினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

800 special buses run today on the occasion of Bakrit in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->