போதைப்பொருள் கடத்தல் - தமிழகம் முழுவதும் 9,634 பேர் கைது.! அதிரடி காட்டும் போலீசார்.! - Seithipunal
Seithipunal


போதைப்பொருள் கடத்தல் - தமிழகம் முழுவதும் 9,634 பேர் கைது.! அதிரடி காட்டும் போலீசார்.!

தமிழகம் முழுவதும் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்க தமிழக போலீஸார் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டில் ஆகஸ்ட் வரையிலான 8 மாதங்களில் போதைப்பொருள் தொடர்பாக 6,824 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இதில் 812 வெளி மாநிலக் குற்றவாளிகள் உட்பட, மொத்தம் 9,634 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 17,330 கிலோ கஞ்சா, 726 கிராம் ஹெராயின், 24,511 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 137 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 மூலமாகவும், 94984 10581 என்ற எண்ணில் வாட்ஸ்-அப்குறுந்தகவல், புகைப்படம் மூலமாகவும் மற்றும் spnibcid@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம். 

அனைத்து மாவட்டங்களுக்கும் வாட்ஸ்அப் எண் தரப்பட்டுள்ளது. போதைப் பொருள் விற்பனை மற்றும் மதுவிலக்கு தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோர் குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிவித்தால், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

9634 peoples arrested for drugs kidnape and sales in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->