70 வயது விவசாயி கழுத்தை அறுத்துக்கொன்ற 90 வயது முதியவர்.! மதுரை அருகே பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் 70 வயது விவசாயின் கழுத்தை அறுத்து 90 வயது முதியவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் டி.குன்னுத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் விவசாயி ராமசாமி(70). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த உறவினரான வேலுச்சாமி (90) என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது. இதனால் இவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம், பணம் தொடர்பாக வேலுச்சாமியை, ராமசாமி தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.

இதனால் கோபமடைந்த வேலுச்சாமி, ராமசாமியின் கழுத்தை அரிவாளால் அறுத்துள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் பலத்த காயமடைந்த ராமசாமியை மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ராமசாமி உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வேலுச்சாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A 90 year old man killed a 70 year old farmer by slitting his throat in madurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->