பெரம்பலூர் || குட்டையில் தவறி விழுந்த 9ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு.!
A 9th grade student who fell into a puddle died in Perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் குட்டையில் தவறி விழுந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் ஒதியம் தேரடி தெருவை சேர்ந்தவர் முத்தமிழ்செல்வன். இவரது மகள் வித்யா(14). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று வித்யா அப்பகுதியில் உள்ள குட்டையொன்றில் துணி துவைக்க சென்றுள்ளார்.
அப்பொழுது வித்யா துணிகளை துவைத்து விட்டு வீட்டிற்கு கிளம்புவதற்கு முன்பு, காலை கழுவும்போது திடீரென தவறி குட்டையில் விழுந்துள்ளார்.
இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக வித்யாவை மீட்டு சிகிச்சைக்காக குன்னம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே வித்யா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வித்யாவின் தந்தை தமிழ்ச்செல்வன் கொடுத்த புகாரின் அடிப்படையில் குன்னம் போலீசார், உயிரிழந்த மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A 9th grade student who fell into a puddle died in Perambalur