நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த விசைப்படகு- மரக்காணத்தில் பரபரப்பு!
A barge that caught fire in the middle of the sea excitement in the forest
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அனுமந்தை குப்பத்தில் கடலில் நிறுத்தி வைக்கபட்டிருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள பைபர் படகு மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.
மரக்காணம் அடுத்துள்ள அனுமந்தை குப்பம் பகுதியை சேர்ந்த மதியழகன், தன்னுடைய ரூ.30 லட்சம் மதிப்பிலான பைபர் படகு மூலம் நேற்று இரவு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுவிட்டு திரும்பி வந்து, தன் பைபர் படகை கடலில் நங்கூரம் மூலம் நிறுத்தி வைத்துள்ளார்.
அதன்பின்னர் நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் அந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள பைபர் படகு மர்மமான முறையில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அங்கு சென்று தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். இருப்பினும் தீயை அணைக்க முடியாமல் அந்த படகு முழுவதுமாக எரிந்து சாம்பலானது. மேலும் இதுகுறித்து போலீசார் யாரேனும் தீயிட்டுக் கொளுத்தினார்களா அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக தீ பற்றி எரிந்ததா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக மரக்காணம் பகுதியில் துறைமுகம் இல்லாத காரணத்தால் நடுக்கடலில் நிறுத்தி வைக்கவேண்டிய நிலை உள்ளது. விசைபடகை தீ வைத்து கொளுத்திய மர்ம நபர்களை உடனடியாக கண்டுபிடிக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
English Summary
A barge that caught fire in the middle of the sea excitement in the forest