வேலையை காட்டும் குற்றாலம்!...திடீர் வெள்ளப்பெருக்கால் அருவிகளில் குளிக்கத் தடை! - Seithipunal
Seithipunal


குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், பாதுகாப்புக் கருதி அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம்,  குற்றாலத்தில் பிரபல சுற்றுலா தலமாக விளங்கி வரும் குற்றால அருவிகளில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு ஏராளாமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து ஆனந்தமாக குளித்து மகிழ்கின்றனர். இங்கு குற்றால சீசன் காலங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.

குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிக்கும் போது, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, குளிக்க தடை விதிக்கப்படுவதும், நீர்வரத்து சீரானதும் குளிக்க அனுமதிக்கப்படுவதும் வழக்கம்.

இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக தென்காசி, பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் குளிக்க தடைவிதிக்கப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, பழைய குற்றால அருவியைத் தொடர்ந்து மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், பாதுகாப்புக் கருதி அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A crime scene that shows the work courtalam bathing in the waterfalls is prohibited due to flash floods


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->