ஆர்டர் செய்ததோ காலிபிளவர் தோசை.... வந்ததோ கரப்பான் பூச்சி தோசை... கண்டுகொள்ளாத ஹோட்டல்.! - Seithipunal
Seithipunal


கோவையில் உள்ள பிரபலமான சைவ உணவகம் ஒன்றில் ஆர்டர் செய்த காலிஃப்ளவர் தோசையில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

கோவையில் உள்ள கோவில் மேடு பகுதியைச் சார்ந்தவர் பிரசாந்த். இவர் கோவை சாய்பாபா காலனி என் எஸ் ஆர் சாலையில் அமைந்துள்ள அன்னபூர்ணா சைவ உணவகத்திற்கு உணவு சாப்பிடுவதற்காக தனது குடும்பத்தினருடன் சென்று இருக்கிறார். அங்கு அவர்கள் இட்லி, புரோட்டா காலிஃப்ளவர் தோசை மற்றும் பன்னீர் தோசை ஆகியவற்றை ஆர்டர் செய்துள்ளனர்.

 

ஆர்டர் செய்த உணவுகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது காலிஃப்ளவர் தோசையிலிருந்த இறந்த கரப்பான் பூச்சியை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர் பிரசாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர். இது தொடர்பாக ஹோட்டல் உரிமையாளரிடம் முறையிட்டுள்ளனர். ஹோட்டல் நிர்வாகத்தினர் தோசைக்கு பதிலாக வேறு தோசை தருவதாக கூறி இருக்கின்றனர். இதற்கு மறுத்த பிரசாந்த் சமையலறை முழுவதையும் சுத்தம் செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

இதற்கு சாதாரணமாக பதிலளித்துள்ள நிர்வாகத்தினர் அவர் விடுத்த கோரிக்கைக்கு மறுப்பும் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியேறிய பிரசாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் வாடிக்கையாளர் உணவு பாதுகாப்புத் துறையிடம் நாளை புகார் அளிப்பதாக கூறிவிட்டு சென்றிருக்கின்றனர். பிரபல சைவ உணவகத்தில் தோசையில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம்  கோவையில் பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a fame restaurant in coimbatore serves cockroach in caulfiflower dosa shocks customer


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->