மொட்டை மாடியில் பிரபல ரவுடி தலையை துண்டித்து படுகொலை! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் என்பவரின் மகன் சுந்தர்ராஜன் (33). சுந்தர்ராஜன் மீது கொலை மற்றும் அடிதடி, வெட்டுகுத்து போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளது.

இதற்கிடையில், அதே தெருவில் உள்ள சுந்தர்ராஜனுக்கு சித்தப்பா மணி என்பவர் உள்ளார், இன்று காலை அவர் வீட்டு மொட்டை மாடியில் சுந்தர்ராஜனின் தலையை துண்டித்து கொடூரமான படுகொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார்.

இதனை பார்த்த அவரது சித்தப்பா மணி , அவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசாருக்கு அவர்கள் உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து திருவெறும்பூர் டிஎஸ்பி-யான ஜாபர் சித்திக் தலைமையிலான போலீசார், உடனே சம்பவ இடத்துக்கு வந்து படுகொலை செய்யப்பட்ட சுந்தர்ராஜனின் உடலைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக  அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில்,  திருச்சி எஸ்பி-யான வருண்குமார் இந்த கொலையை தோடர்ந்து சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர்,  போலீசார் மோப்ப நாய் லீலி உதவியுடன் அந்த தெருவில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருவெறும்பூர் போலீசார், சுந்தர்ராஜன் முன் விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு எதாவது தொழில், போட்டி, பொறாமை காரணமாக கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், அந்த பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுதியுயள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A famous rowdy was beheaded on the terrace and killed A lot of excitement in the area


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->