ஹோம் டூர் வீடீயோ போட்ட யூடியூபரிடம் கைவரிசை காட்ட முயன்ற கொள்ளை கும்பல்.! - Seithipunal
Seithipunal


கோவை குனியமுத்தூர் பகுதியைச் சார்ந்தவர் சுஹைல். இவரது வயது 29. இவரது மனைவி பெயர் பமிதா வயது 28. இவர்கள் இருவரும் சேர்ந்து சைபர் தமிழா மற்றும் சுஹைல் வி'லாகர் என இரண்டு youtube சேனல்களை நடத்தி வருகிறார்.

youtube-ன் மூலம் சம்பாதித்த பணத்தை கொண்டு கோயம்புத்தூரில் தனக்கு சொந்தமாக கனவு இல்லம் என்ற வீட்டை இவர்கள் கட்டி வந்தனர். இந்த வீட்டின் கட்டுமான பணி ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு நிகழ்வுகளையும் தங்களது youtube சேனலின் சப்ஸ்க்ரைபர்களுடன்    வீடியோக்களை பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வந்தனர்.

இவர்களது கனவு இல்லத்தின் பணி முடிந்து கடந்த வருடம் ஏப்ரல் மாதம் கிரகப்பிரவேசம் செய்து புது வீட்டில் குடியேறினர். அந்த வீட்டில் தான் தற்போது வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று கொள்ளையர்கள் அதற்கு முந்தைய இரவே இவர்களின் வீட்டிற்கு வந்து மொட்டை மாடியில் பதுங்கி இருந்திருக்கின்றனர்.

பின்னர் ஒரே ஒரு கொள்ளையன் மட்டும் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டி சுஹைலிடம் கத்தியை காட்டி மிரட்டி  கொள்ளையடிக்க முயன்றுள்ளார். இதனை சுதாகரித்துக் கொண்ட சுஹைல் அவரை மடக்கி பிடித்து பக்கத்து வீட்டாரின் உதவியுடன் காவல்துறையில் ஒப்படைத்துள்ளார்.

காவல்துறை விசாரணையில்  கொள்ளையடிக்க வந்த நபர் புதுச்சேரியைச் சார்ந்த 25 வயது ஏசி மெக்கானிக்கான அனுராமன் என்பது தெரிய வந்தது. இவரும் சுஹைலின் சேனல் சப்ஸ்கிரைப் என்பது தான் அதிர்ச்சியான உண்மை. அவரது  வீடியோக்களை பார்த்து தானும் குறுகிய  வழியில் சம்பாதித்து பணக்காரனாக வேண்டும் என்ற திட்டத்துடன் இந்த தவறான செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் கோவை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a gang of robbers tries to attempt a heist n youtuvers house


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->