மதுரை : அயோத்திக்கு ஆன்மீக சுற்றுலா என்று கூறி போலி விமான டிக்கெட் கொடுத்து மோசடி.. !! - Seithipunal
Seithipunal



மதுரைப் பகுதியைச் சேர்ந்த மக்களிடம் அயோத்திக்கு ஆன்மீகச் சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி பணம் பெற்றுக் கொண்டு போலி விமான டிக்கெட் கொடுத்து ஏமாற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் ஏராளாமான தனியார் சுற்றுலா நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்கள் மக்களை பேருந்து, ரயில் மற்றும் விமானம் மூலம் ஆன்மீகச் சுற்றுலா அழைத்துச் செல்வதுண்டு. இதற்கென்றே தனியாக பல ஏஜென்சிக்களும் உள்ளன. 

அந்தவகையில் ஒரு ஏஜென்சி மிக குறைந்த கட்டணத்தில் அயோத்திக்கு ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்வதாக சமூக வலைத்தளத்தில் விளம்பரம் செய்துள்ளது. இதைப் பார்த்த மதுரைப் பகுதி மக்கள் குறைந்த கட்டணம் என்பதால் இதில் பதிவு செய்துள்ளனர். 

அதன்படி அயோத்தி சென்று தரிசனம் முடித்துவிட்டு, பிறகு திரும்பி வரும் வகையில், ஒருவருக்கு ரூ. 29,000 என்று மொத்தம் 106 பேரிடம் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 12ம் தேதி காலை மதுரையில் இருந்து விமானம்  புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை நம்பி மக்கள் இன்று காலை அயோத்தி செல்ல மதுரை விமான நிலையம் சென்ற நிலையில், அந்த ஏஜென்சி சார்பாக யாரும் வரவில்லை என்று தெரிய வந்ததையடுத்து, இண்டிகோ நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது அங்கு அப்படி அயோத்திக்கு எந்த டிக்கெட் பதிவும் செய்யப்படவில்லை என்று பதில் கிடைத்துள்ளது. 

இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அங்கு வாக்குவாதத்தில்  ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போலீசார் தற்போது இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A Gang Scammed Madurai Peoples By Giving Fake Flight Tickets to Spiritual Tour to Ayodhya


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->