ஷாஜகான் போல இறந்த மனைவியின் நினைவாக வீடு கட்டி சிலை வைத்த லாரி ஓட்டுநர்.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் ஷாஜகான் போல இறந்த மனைவியின் நினைவாக லாரி ஓட்டுநர் வீடு கட்டி சிலை வைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டம் மாமாங்கம் பகுதியில் உள்ள ஊற்றுகிணறு, கிளாக்காடு பகுதியை சேர்ந்தவர் லாரி டிரைவர் இருசன். இவரது மனைவி நீலா. இவர்களுக்கு கஸ்தூரி, லோகேஸ்வரி, ரேஷ்மா ஆகிய 3 மகள்கள் உள்ளனர். 

இந்நிலையில் போதிய அடிப்படை வசதி இல்லாத வீட்டில் இருசன் குடும்பத்தினர் வசித்து வந்ததால், கடந்த ஓராண்டுக்கு முன்பு இரவு வீட்டில் நீலாவை பாம்பு கடித்ததால் உயிரிழந்தார்.

இதனால் மன வேதனையில் இருந்த இருசன் இது போன்ற நிகழ்வு மீண்டும் குடும்பத்தில் உள்ள பிள்ளைகளுக்கு வரக்கூடாது என்பதற்காக அடிப்படை வசதியுடன் வீட்டை கட்ட வேண்டும் என நினைத்து, கடந்த ஓராண்டாக கடின முயற்சியில் புதிய வீட்டை கட்டினார்.

இதையடுத்து அந்த வீட்டில், தான் கஷ்டப்படும்பொழுது தன்னுடன் இருந்த மனைவியின் நினைவாக அவரது மெழுகு சிலையை ரூ.1 லட்சம் மதிப்பில் சிலிக்கான் மற்றும் பைபர் மூலம் உருவாக்கப்பட்ட உருவசிலையை புதிய இல்லத்தின் வரவேற்பு அறையில் வைத்துள்ளார். 

மேலும் மனைவியின் உருவ சிலைக்கு, தன்னுடன் மனைவி உயிருடன் இருக்கும் பொழுது அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் தாலி ஆகியவற்றை அணிவித்து, அழகுபார்த்த இருசனின் செயல் அப்பகுதியில் உள்ள மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A lorry driver built a house in memory of his dead wife and her statue in salem


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->