வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்ட பாத்திரகடைக்காரர்.. கள்ளகுறிச்சி அருகே நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்..!
A man Murder Near Kallkurichi
பாத்திரக்கடை உரிமையாளர் கொடூரமாக வெட்டிக் கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், புதுஉச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி. அவர் அந்த பகுதியில் பாத்திரகடை நடத்த வந்துள்ளார். அப்போது, வீடு திரும்பிய நாராயணசாமி வீட்டுக்கு வந்தவுடன் தண்ணீர் குடிக்க சென்றுள்ளார்.
அப்போது திடீரென வீட்டிற்கு வந்த 6 பேர் கும்பல் வீட்டுக்குள் நுழைந்து நாராயணசாமியை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்ய கோரி கள்ளக்குறிச்சி - வேப்பூர் நெடுஞ்சாலையில் நாராயணசாமியின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
A man Murder Near Kallkurichi