சென்னை : பெட்ரோல் குண்டு வீசிய நபர் - காரணத்தைக் கேட்டா அதிர்ந்து போயிடுவீங்க..!! - Seithipunal
Seithipunal



சென்னை அண்ணாநகரில் உள்ள மேற்கு அன்னை சத்யா நகரில் நேற்று (ஜூலை 25) அன்று இரவில் மதுபோதையில் இருந்த ஒரு இளைஞர் போலீஸ் பூத் அருகே பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். இவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை அண்ணாநகரில் உள்ள மேற்கு அன்னை சத்யா நகரில் நேற்று இரவு முழு மதுபோதையில் இருந்த இளைஞர் ஒருவர், போலீஸ் பூத் அருகே இருந்த சுவற்றிலும், அப்பகுதியில் இருந்த டாஸ்மாக் கடை முன்பும் பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். இந்த இரண்டு இடத்திலும் குண்டுகள் வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்தன. 

இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் சிலரே பெட்ரோல் குண்டு வீசிய நபரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், பெட்ரோல் குண்டு வீசிய நபரின் பெயர் பாலமுரளி (31) என்பதும், அவரும் அதே பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் இவர் ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது ஏற்கனவே சில கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது. 

மேலும் சில காலமாக தனது தாயுடன் திருச்சியில் வசித்து வந்த பாலமுரளி மதுவுக்கு அடிமையாகி, மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும், சிறைக்குச் செல்ல வேண்டும் என்பதற்காகவே பாட்டிலில் திரியிட்டு பெட்ரோல் நிரப்பி கொளுத்தி வீசியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A Man Who Hurled A Petrol Bomb in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->