ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் அதிரடி கைது ! - Seithipunal
Seithipunal


அடிக்கடி கைது செய்த போலீசார்! லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் போட்டு கொடுத்த குற்றவாளி!

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த சமட்டிக்குப்பத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் மீது குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலவையில் உள்ளது.

ஸ்ரீகாந்த்தை முன் எச்சரிக்கை நடவடிக்கை என குள்ளஞ்சாவடி போலீசார் கைது செய்வது வழக்கம். இதே பாணியில் 5 நாட்களுக்கு முன்பு போலீசார் அவரை கைது செய்து கடலூர் அரசு மருத்துவமனையில் உடல் தகுதி சான்றிதழ் பெற அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்பொழுது உடல்நிலை சரி இல்லை என மருத்துவர்கள் சான்றிதழ் வழங்க மறுத்துள்ளனர். இதனால் ஜாமீனில் விடுவிக்க ஆய்வாளர் ஷியாம் சுந்தர் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இருவருக்கிடையே நடந்த பேரமானது ஐந்தாயிரம் ரூபாயில் முடிந்துள்ளது. 

இதனை அப்படியே கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஸ்ரீகாந்த் போட்டுக் கொடுத்துள்ளார். அவர்களின் அறிவுறுத்தலின்படி காவல் நிலையம் சென்ற ஸ்ரீகாந்த் ஆய்வாளரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை தந்தார்.

அப்பொழுது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஷாம் சுந்தரை அதிரடியாக கைது செய்துள்ளனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A police inspector who took a bribe of Rs 5 thousand was arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->