காஞ்சிபுரம் அருகே பரபரப்பு.! மழை நீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த தனியார் ஊழியர் பலி.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை நீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்த தனியார் ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சியில் மழை நீர் வடிகால் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அப்பகுதி சேறும் சகதியுமாக, பள்ளத்தில் மழை நீர் தேங்கியும் இருந்துள்ளது. 

இந்நிலையில், அவ்வழியாக சென்ற தனியார் நிறுவன ஊழியர் லட்சுமிபதி(42) என்பவர் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த லட்சுமிபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உரிய பாதுகாப்பின்றி நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளால் உயிர் பலி அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A private employee fell into the rainwater drainage ditch and died in kanchipuram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->