முதல்வர் ஸ்டாலினுக்கு ஆபத்தா.?! ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு.!
A raja MP speech dangerous in various ways for the Chief Minister of Tamil Nadu
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்த நாளையொட்டி பொதுக்குழு கூட்டம் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் திமுகவின் எம்பி மற்றும் முக்கிய பேச்சாளரான ராசா கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய அவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில் திமுக அவர்களுடன் கூட்டணியில் இருந்தாலும் காவிகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் தலைவர் கலைஞர் என தெரிவித்துள்ளார்.
மேலும் பாராளுமன்றம் பற்றிய தனது கருத்தை பதிவிட்டு அவர் தன்னுடைய அரசியல் வரலாற்றிலேயே பாராளுமன்றத்திற்கே வராத ஒரு பிரதமரை இப்பொழுதுதான் முதல் முதலில் பார்க்கிறேன் எனக் கூறியுள்ளார். மேலும் தற்போதைய முதல்வர் ஸ்டாலினுக்கு பல வகைகளிலும் ஆபத்திருப்பதை நாம் யாரும் மறுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
அதானி விவகாரத்தில் மோடியின் மீது குற்றச்சாட்டு எழுந்தபோது அதற்கு எதிராக ஏன் பிரதமர் பதிலளிக்கவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அதானி குற்றவாளி என்றால் நிச்சயமாக அம்பானியும் குற்றவாளி தான் என அடித்து கூறினார்.
English Summary
A raja MP speech dangerous in various ways for the Chief Minister of Tamil Nadu