ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்யலாம்! அஞ்சல் துறை ஏற்பாடு.! - Seithipunal
Seithipunal


ஆதார் அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள அஞ்சல் துறை சார்பில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யபட்டு உள்ளன.

இது தொடர்பாக அஞ்சல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், புதிய ஆதார் அட்டை விண்ணப்பிக்கவும், ஆதார் அட்டையில் முகவரி மாற்றம், கைபேசி எண்ணை பதிவேற்றுதல் மற்றும் திருத்துதல், பிறந்த தேதி மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்காக அஞ்சல் துறை சார்பில் அனைத்து அஞ்சலகங்களிலும் பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சேவையை பெற விரும்புவோர் ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம், பாஸ்போர்ட், பான் அட்டை, பள்ளி அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் அசல் ஆவணத்தை கொண்டு வந்து இந்த சேவையை பெறலாம் என்றும், புதிய ஆதார் அடை எடுக்க கட்டணம் இல்லை என்றும், பழைய ஆதாரில் திருத்தங்கள் மேற்கொள்ள 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் சிறப்பு முகாம்கள் குறித்து அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தையும், அஞ்சல் ஆதார் சேவை மையத்தையும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aadhar special camp post office


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->