ஆதவ் அர்ஜுனாவின் நட்பு விஜயின் அரசியலுக்கு நல்லதல்ல - அமீர்! - Seithipunal
Seithipunal


சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில், த.வெ.க. தலைவர் விஜய் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனன் ஆகியோர் ஆவேசமான உரைகளை ஆற்றினர்.

இந்நிகழ்வில் பேசிய விஜய், "மக்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாத ஆட்சியாளர்கள் மக்களால் தோற்கடிக்கப்படுவார்கள்" என்றார். மேலும், அவர் வலியுறுத்தியதாவது:

"கூட்டணி கணக்குகளை நம்பி 200 தொகுதிகளை வெல்வோம் என்று ஏகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு இது எச்சரிக்கை. 2026 தேர்தலில், மக்களே அந்த கணக்குகளை மைனஸ் ஆக்கிவிடுவார்கள்."

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதவ் அர்ஜூனன், மன்னர் பரம்பரை அரசியலை விமர்சித்தார். அவர் கூறியதாவது:

"தமிழகத்தில் மன்னராட்சி முடிவடைய வேண்டும். 2026 தேர்தலில் பிறப்பால் முதலமைச்சர் உருவாகக்கூடாது. சமூகநீதிக்கு இது நேர்மையான மாற்றம்."

விழா முடிவுக்குப் பிறகு, இயக்குநர் அமீர் தனது வாட்சப்பில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார், இது விஜயின் அரசியல் தொடர்பாக ஆலோசனை அளிக்கும் விதமாகப் பார்க்கப்பட்டது.
அமீரின் வாட்சப் ஸ்டேட்டஸில் குறிப்பிடப்பட்டதாவது:

"பிறப்பால் ஒருவர் பணக்காரர் ஆகலாம். ஆனால் மக்கள் ஆதரவின்றி ஒருவர் முதலமைச்சராக முடியாது."

"செல்வந்தர்களின் திடீர் அரசியல் பிரவேசம் மக்களுக்கு நன்மை தராது. ஆதவ் அர்ஜூனனின் நட்பு, விஜயின் அரசியலுக்கு நல்லதல்ல."

விஜயின் சமூகநீதியை வலியுறுத்தும் கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதேசமயம், அமீரின் கருத்தும் அரசியல் சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கும் வகையில் உள்ளது.

2026 தேர்தல் முன்னோட்டத்துடன், தமிழ்நாட்டில் விஜயின் அரசியல் பயணம் மற்றும் அவரின் கூட்டணி தீர்மானங்கள் எப்படி அமையும் என்பது எதிர்பார்ப்புக்குறியதாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aadhav Arjuna friendship is not good for Vijay politics Aamir


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->