ஆடிப்பெருக்கில் கூடுதல் பத்திரப்பதிவு.. ஒரே நாளில் இத்தனை கோடி வருவாயா.?! - Seithipunal
Seithipunal


நேற்று நடைபெற்ற பத்திரப்பதிவில் ரூ.100 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக பத்திரப்பதிவுத்துறை அறிவித்துள்ளது.

தமிழக பதிவுத்துறை அலுவலகங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் அனைத்தையும் இணைய வழியில் செலுத்த ஸ்டார் 3.0 என்ற பதிவுத்துறை ஆப் கொண்டுவரப்பட இருக்கின்றது. 

இத்தகைய சூழலில் நேற்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதலாக டோக்கன்கள் வழங்கப்பட்டது. இதன் மூலமாக, பத்திரப்பதிவு அலுவலகங்கள் கூடுதலான நேரம் செயல்பட்டன.

ஒவ்வொரு வருடமும் ஆடிப்பெருக்கு நாளில் பத்திர பதிவு அலுவலகங்கள் கூடுதலான நேரத்தில் இயங்குவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டும் பத்திர பதிவு அலுவலகங்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் இயங்கின. இந்த நிலையில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு நேற்று நடைபெற்ற பத்திரப்பதிவில் ரூ.100 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக பத்திரப்பதிவுத்துறை இன்று அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aadi 18 registration 100 crores in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->