போராட்டத்தை அறிவித்த மக ஸ்டாலின்., மிரண்டு போன ஆடுதுறை., உடனடியாக நடந்த வேலை.! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், தஞ்சை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பெய்த மிக அதிக கனமழையால் பொது மக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்த மழை வெள்ளத்தால் வயல்களில் வெள்ளநீர் தேங்கி, நெற்பயிர்கள் அழுகின. மேலும், கனமழை  காரணமாக சாலைகள் குண்டும், குழியுமாக சேதமடைந்தன. ஏற்கனவே மோசமாக இருந்த சாலைகள், மிக மோசமாக மாறியது.

அந்த வகையில், ஆடுதுறை பகுதி சாலைகள் மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக மாறியது. இதனை சரி செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் சார்பாக பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால், அதிகாரிகள் சாலையை சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனையடுத்து வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் ம.க ஸ்டாலின் சாலையை சரிசெய்ய கோரி போராட்டத்தை அறிவித்தார்.

அந்த அறிவிப்பில், "வரும் 20ஆம் தேதி ஆடுதுறையில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் சாலைகளையும், மோசமாக காணப்படும் மின்கம்பங்களை சரிசெய்ய கோரி., வாழைக்கன்று நடும் போராட்டம் நடத்தப்படும்" எண்டு வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் ம க ஸ்டாலின் அறிவித்திருந்தார். போராட்டத்துக்கான சுவரொட்டிகளும் ஆடுதுறை முழுவதும் ஒட்டப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக, வன்னியர் சங்கம் போராட்டம் அறிவித்ததை கண்டு, ஆடுதுறையில் தற்போது சாலைகள் உடனடியாக சீர் செய்யப்பட்டு வருகிறது.

வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்த போராட்டத்தால் தான் தற்போது சாலைகள் சீர் செய்யப்பட்டு வருவதாக ஆடுதுறை வாசிகள் பேசிக்கொள்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AADUTHURAI VANNIYAR SANGAM PROTEST


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->