இன்று முதல் ஆவின் பால் விலை உயர்வு.!! எவ்வளவு தெரியுமா.?
Aavin Milk packet prise increased in TamilNadu
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் மூலம் தமிழக முழுவதும் பல்வேறு தரத்தில் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இரண்டு முறை செறிவூட்டப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட் தேனீர் கடைகளுக்கு ஏற்றவாறு 5 லிட்டர் பாக்கெட்டைகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
![](https://img.seithipunal.com/media/aavin-ewj4n.jpg)
இந்த நிலையில் இன்று முதல் 5 லிட்டர் ஆவின் பச்சை பால் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது ஐந்து லிட்டர் கொள்ளளவு கொண்ட பால் பாக்கெட் ரூ. 210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் மேலும்.ரூ.10 வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
![](https://img.seithipunal.com/media/20230812_073956-m7ua8.jpg)
இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் ரு.210 க்கு விற்கப்பட்டு வந்த பச்சை பால் இனி ரூ.220க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு காரணம் போக்குவரத்து செலவு உற்பத்தி செலவு அதிகரித்ததன் காரணமாக விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆவின் பால் விலை உயர்வால் டீ, காஃபி விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
English Summary
Aavin Milk packet prise increased in TamilNadu