பிளாஸ்டிக் தான் மக்கள் விருப்பம்! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்! நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!
Aavin Milk sales in glass bottle report submitted in MadrasHC
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை மீது தடை விதிக்கப்பட்டது. இதனை மறு ஆய்வு செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் ஆவின் பால் பிளாஸ்டிக் பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்வதற்கு பதிலாக கண்ணாடி பாட்டில் அடைத்து வைத்தால் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்கப்படும் என கூறிய உயர் நீதிமன்றம் இது குறித்து கருத்துக்கணிப்பு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஆவின் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அமர்வின் முன்பு இந்த விசாரணைக்கு வந்த போது ஆவின் நிறுவனத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளிலும், சென்னையில் வில்லிவாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் எடுக்கப்பட்ட மக்கள் கருத்துக்கணிப்பில் ஆவின் பாலை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்ய ஆதரிப்பீர்களா? ஆவின் பாலை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்ய வேண்டுமா பிளாஸ்டிக் பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்ய வேண்டுமா? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பொதுமக்கள் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்தால் பால் விலை கணிசமான அளவு உயரம் என்பதால் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளிலேயே ஆவின் பாலை விற்பனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் விரும்புவதாக ஆய்வின் அறிக்கையில் தெரிய வந்துள்ளதாகவும், எனவே நுகர்வோரின் விருப்பத்தின் அடிப்படையில் நீதிமன்றம் பரிசீலனை செய்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணை அக்டோபர் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
English Summary
Aavin Milk sales in glass bottle report submitted in MadrasHC