ஆவின் பன்னீர் மற்றும் பாதாம் பவுடர் ரூ.100 உயர்வு.!!
Aavin Paneer and Almond Powder up to Rs100 per kg
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் மூலம் விற்கப்படும் உப பொருட்களின் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஆவின் விற்பனையகங்களில் ஆவின் பன்னீர் மற்றும் ஆவின் பாதாம் பவுடர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள. சுற்றறிக்கையில் "ஆவின் நிறுவனம் சார்பில் விற்கப்படும் ஆவின் பன்னீர் விலை ஒரு கிலோ ரூ.450ல் இருந்து ரூ.550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரை கிலோ பன்னீர் ரூ.250ல் இருந்து ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போன்று ஆவின் பாதாம் பவுடர் 200 கிராம் பாக்கெட் விலை ரூ.100ல் இருந்து ரூ.120 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட ஆவின் உபப்பொருட்களின் விலையை திரும்பப் பெற வேண்டும் என பொதுமக்களும் பால் முகவர்கள் சங்கத்தினரும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
English Summary
Aavin Paneer and Almond Powder up to Rs100 per kg