கர்ப்பிணி பெண்களுக்கு ஆயுஷ் படிப்பு படித்தவர்கள் பரிசோதனை - அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கர்ப்பிணி பெண்களுக்கு அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்ப பரிசோதனைகள் செய்ய இந்திய முறை மருத்துவ படிப்புகளை படித்தவர்களுக்கு தகுதி இல்லை என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆயுர்வேதா, சித்தா, யுனானி போன்ற மருத்துவ படிப்புகளை படித்தவர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்ய தகுதியற்றவர்கள் என தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து ஆயுஸ் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தலைமை நீதிபதி கங்காபூர்வலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பாலின நிர்ணயத்தில் ஈடுபடாத வரை தங்களை பரிசோதிக்க அனுமதிப்பதில் தவறில்லை என ஆயுஷ் சங்கம் தரப்பில் இருந்து வாதம் முன்வைக்கப்பட்டது.

மேலும் ஆயுஷ் படிப்புகளுக்கான பாடத்திட்டம் இசிஜி, எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் ஆகியவற்றை உள்ளடக்கியது என இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையம் தெளிவுபடுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இதுகுறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் செப்டம்பர் 25ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aayush treatment to pregnant women case court order govt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->