சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்....சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த உஷா, கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவருக்கு விடுப்பு வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தனக்கு அறுவை சிகிச்சை செய்ய நிதி திரட்டுவதற்காக, கணவரின் உதவி தேவைப்படுவதால்,  28 நாட்கள் விடுப்பு வழங்கக் கோரி கடந்த ஜூன் மாதம் அளித்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்த மனு மீதான விசாரணை  நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்குவந்த போது, சிறை நிர்வாகத்திடம் அளிக்கப்பட்ட மனுவை பரிசீலிக்க 28 நாட்கள்அவகாசம் உள்ள நிலையில், 15 நாட்களுக்குள்ளாகவே ஏன் வழக்கு தாக்கல்செய்யப்பட்டது என்று  நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்து  பேசிய உஷா தரப்பு வழக்கறிஞர் எஸ்.நதியா, அவசர சூழல் காரணமாகவே மனுத்தாக்கல் செய்யப்பட்டதாக கூறியதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுதாரரின் கணவருக்கு 28 நாட்கள் விடுப்பு வழங்கி உத்தரவிட்டனர்.

மேலும், தண்டனை கைதிகள் விடுப்புக் கோரி விண்ணப்பிக்கும் மனுவை உரிய கால அவகாசத்துக்குள் பரிசீலிக்க வேண்டுமென சிறைத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், உரிய கால அவகாசத்துக்குள் விடுப்பு கோரும் விண்ணப்பங்களை பரிசீலிக்காத
அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Action will be taken against prison officials Chennai High Court warning


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->