ஆளுநரின் பாராட்டு விழாவை புறக்கணிக்கிறாரா நடிகர் அஜித்?
actor ajith kumar avoide in governor function
ஆளுநர் நடத்தும் பாராட்டு விழாவில் நடிகர் அஜித்குமார் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.
![](https://img.seithipunal.com/media/governor ravi 11-pevda.png)
அந்த வகையில், குடியரசு தினத்தை முன்னிட்ட 2025-ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. அந்தப் பட்டியலில், நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித்குமார், நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி என தமிழகத்தை சேர்ந்த மூன்று பேருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு இன்று பாராட்டு விழா நடத்த உள்ளார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்க மாட்டார் என்று அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
English Summary
actor ajith kumar avoide in governor function