'எலோன் மஸ்க் தான் என் குழந்தைக்கு அப்பா'; பகீரை கிளம்பியுள்ள பிரபல எழுத்தாளர்..! - Seithipunal
Seithipunal


உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவரம் ஸ்பேஸ்-க்ஸ் தளத்தின் நிறுவனருமான எலான் மஸ்க், அமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் அரசு நிர்வாகத்தில் முக்கிய பாங்காற்றி வருகிறார். தற்போது தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

இவருக்கு ஏற்கனவே 3 திருமணங்கள் ஆகி 11 குழந்தைகள் உள்ளனர். முதல் மனைவி ஜஸ்டின் வில்சனுக்கு 05 குழந்தைகளும், 02வது மனைவி க்ரீம்ஸ்க்கு 03 குழந்தைகளும், 03வது மனைவி ஷிவோன் ஷில்லிஸ்க்கு 03 குழந்தைகளும் உள்ளனர். இவர் தனது முதல் 02 மனைவிகளை பிரிந்து, தற்போது 03வது மனைவி ஷிவோனுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், எழுத்தாளரும், பழமைவாத சிந்தனை கொண்டவருமான 31 வயதான ஆஷ்லே செயின்ட் கிளேர் என்பவர், தனக்கு பிறந்துள்ள 05 மாதக் குழந்தைக்கு எலான் மஸ்க் தான் தந்தை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது, '05 மாதங்களுக்கு முன்பு என்னுடைய குழந்தையை இந்த உலகிற்கு வரவேற்றேன். என் குழந்தைக்கு எலான் மஸ்க் தான் தந்தை. குழந்தையின் பாதுகாப்பு காரணமாக, இந்த விவகாரத்தை ஆரம்பத்தில் வெளியே சொல்லாமல் இருந்தேன். இது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் கசிய தொடங்கியதால், தற்போது வெளியே சொல்ல முடிவு செய்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவர், எனது குழந்தை இயல்பான மற்றும் பாதுகாப்பான சுற்றுச்சூழலில் வளர வேண்டும் என்பதே எனது நோக்கம். ஊடகங்கள் எங்கள் குழந்தையின் தனியுரிமையை மதிக்க வேண்டும். தேவையில்லாத தகவல்களை தவிர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்,' இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இவரது இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தப் பதிவுக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களையும், ஆதரவுகளையும் கூறி வந்தனர் . ஆனால், எலான் மஸ்க் இதுவரையில் எந்த பதிலும் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் பதிவை போட்ட பிறகு சுமார் 03 மணிநேரம் கழித்து ஆஷ்லே செயின்ட் கிளேர், 'தனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி. குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும் என்பதால், தற்போது எக்ஸ் தளத்தில் இருந்து வெளியேறுகிறேன்,' எனக் கூறி பரபரப்பை விட்டு சென்றுள்ளார்.

https://x.com/stclairashley/status/1890554279749951687/photo/1


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A famous writer shocked that Elon Musk is the father of my child


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->