பணமோசடி வழக்கு - நடிகை ஜெயலட்சுமி சிறையில் அடைப்பு.! - Seithipunal
Seithipunal


பணமோசடி வழக்கில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னணி நடிகையான ஜெயலட்சுமி கடந்த 2022-ம் ஆண்டு ‘சினேகம் பவுண்டேஷன்’ என்ற பெயரைப் பயன்படுத்தி பலரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக பாடலாசிரியர் சினேகன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். 

இதைத் தொடர்ந்து, நடிகை ஜெயலட்சுமி தன்மீது சினேகன் அவதூறு பரப்புவதாக கூறி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இப்படி இருவரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததை அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக நடிகை ஜெயலட்சுமி நேற்று கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். நீண்ட நேரம் அவரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor jeyalakshmi arrested for money fraud case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->